தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் ! தமிழக அரசின் அறிவிப்புக்கு பாராட்டு

தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் ! தமிழக அரசின் அறிவிப்புக்கு பாராட்டு

 தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் திருத்தம் செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் – ஒரு உணர்வுப்பூர்வமான மொழி, தொன்மையான கலாச்சாரமும்கூட. இடத்தின் பெயர்கள் அவற்றின் பெருமைவாய்ந்த கலாச்சார சிறப்பு, வரலாறு & ஆன்மீக முக்கியத்துவத்தை குறிக்கும். தமிழ் மக்களுக்கு தங்கள் மண்ணின் மீது ஆழ்ந்த பிடிப்பினை உண்டாக்கும் அதன் பெயர் சூட்டும் மரபினை காப்பது அவசியம்” என்று கூறியுள்ளார்.இதேபோல், இந்தியாவின் பெயரையும் நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவும் மக்கள் மனதில் பெருமிதம் உருவாகவும் ‘பாரத்’ (பாரதம்) என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதற்கு முன்பு இந்தி திணிப்பு தொடர்பாக வட இந்திய ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு சத்குரு பதில் அளிக்கும் போது, “தமிழ் வெறும் ஒரு மொழி மட்டும் அல்ல. அது ஒரு கலாச்சாரம், பண்பாடு. மக்களின் மனதில் ஆழமாக வேர் ஊன்றியுள்ளது. தமிழ்நாட்டில் அவர்கள் தமிழை பேசுவது மட்டுமல்லாமல் அதை சுவாசிக்கின்றனர். தமிழுடன் இவ்வளவு ஆழமான உணர்வு ரீதியான தொடர்பு இருக்கும் போது உங்கள் மொழியை அவர்கள் மீது திணிக்க முயற்சிக்காதீர்கள்” என்று தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசினார்.

Join our channel google news Youtube