சச்சின் ,ரோஹித் சர்மா சாதனையை முறியடிப்பாரா ?டேவிட் வார்னர்!

இன்றைய இரண்டாவது அரை இறுதியில் இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணி மோத உள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் இந்திய அணியின் ரோஹித் , சச்சின் இருவரின்  சாதனையை முறியடிப்பாரா ?என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது.

ரோஹித் சர்மா நடப்பு உலகக்கோப்பையில்  647 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். ஆனால் ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் 1 ரன் மட்டுமே  எடுத்து வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.இதன் மூலம் நடப்பு உலக்கோப்பையில் ரோஹித் சர்மா அடித்த 648 ரன்கள் அதிக பட்ச ரன்னாக தற்போது  உள்ளது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் டேவிட் வார்னர்  638 ரன்கள் அடித்து உள்ளார். இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் 11 ரன்கள்  எடுத்தால் நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் முதல் இடத்தை பிடித்து விடுவார்.

மேலும் டேவிட் வார்னர் 36 ரன்கள்  எடுத்தால் 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின்  673 ரன்களை அடித்து இருந்தார்.அதுவே இதுவரை ஒரு உலகக்கோப்பை தொடரில் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது டேவிட் வார்னர் 36 ரன்கள் அடித்தால் சச்சின் சாதனையையும் முறியடித்து விடுவார்.

சச்சின் – 673
ஹேடன் – 659
ரோஹித் – 648
வார்னர் – 638 *
author avatar
murugan