தன்னுடைய அணியை விற்பனை செய்தார் சச்சின் டெண்டுல்கர்..!!

இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் கிளப் அணியில் தனக்கு சொந்தமான பங்குகளை தொழிலதிபர் ஒருவருக்கு சச்சின் விற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிரிக்கெட்டிற்கு ஐ.பி.எல் போல கால்பந்துக்கு இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் கிளப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் 2014ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். மேலும் கேரளா அணியின் இணை பங்குதாரர்களாக, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத், திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன், நடிகர்கள் நாகர்ஜூனா, சீரஞ்சிவி ஆகியோர் இருக்கின்றனர்.

Image result for இந்திய சூப்பர் லீக் கால்பந்து

20 சதவிகித பங்குகளை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று கலந்துகொண்டு வந்தார். மேலும் போட்டிகளையும் நேரில் சென்று பார்த்து வீரர்களுக்கு உற்சாகமளித்து வந்தார். இந்நிலையில், திடீரென தனது வசம் இருந்த பங்குகளை வேறு ஒருவருக்கு சச்சின் கைமாற்றியுள்ளார்.இந்த தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment