ராஜஸ்தான் அரசியல் குழப்பம்.. நாளை சச்சின் பைலட் ஆதரவாளர்கள் மனு விசாரணை .!

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்.. நாளை சச்சின் பைலட் ஆதரவாளர்கள் மனு விசாரணை .!

தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் ஆதரவு  எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும்  துணை முதலமைச்சர்  சச்சின் பைலட் இடையேயான பிளவு காரணமாக  சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்றார். சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் இரண்டு முறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.

இதனால், மாநில சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி கடந்த ஜூலை 14- ம் தேதி தகுதிநீக்க நோட்டீஸை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நோட்டீஸை ரத்து செய்ய கோரி சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள்  ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரஜித் மஹந்தி மற்றும் நீதிபதி பிரகாஷ் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் 18 பிற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு  நடைபெற உள்ளது. இன்று மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தனது வாதங்களை மீண்டும் தொடர்ந்தார். மூத்த ஆலோசகர் ஹரிஷ் சால்வே மற்றும் முகுல் ரோஹ்தகி ஆகியோர் தங்கள் வாதங்களை நிறைவு செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, இந்த வழக்கு விசாரணைக்கு விசாரணைக்கு வந்தபோது,  சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது வருகின்ற செவ்வாய்க்கிழமை(அதாவது நாளை) வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!
கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் - டொனால்ட் டிரம்ப் 
3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி.... பும்ரா....!
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!
8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு - குலாம் நபி ஆசாத்
ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!
சட்டம் ஒழுங்கு கோமாவில் உள்ளது - அதிமுகவை சாடிய உதயநிதி ஸ்டாலின்!