சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி!

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி!

  • சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 
  • இந்த வழக்கில் சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கேரள, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனத்திற்காக அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சென்ற வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் படி சென்றவருடம் கேரளா போலீசின் பலத்த பாதுகாப்பு மூலம் சில பெண்கள் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தனர்.

ஆனால், இந்தாண்டு கேரளா அரசு, ஐயப்பன் கோவிலுக்கு எப்போதும் கொடுக்கும் பாதுகாப்புதான் கொடுப்போம். பெண்களுக்கு தனி பாதுகாப்பு கொடுக்கமாட்டோம் என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக, பாத்திமா, பிந்து என்கிற இரு பெண்கள், சபரிமலைக்கு செல்லும்அணைத்துவயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சபரிமலை செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது என கூறி இந்த வழக்கை நிலுவையில் வைத்துள்ளது.

சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் விரைவில் 7 பேர் கொண்ட பெரிய நீதிபதி அமர்வு மூலம் விசாரிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube