#தேவஸ்தானம் அறிவிப்பு-5000 பக்தர்களுக்கு அனுமதி.!

#தேவஸ்தானம் அறிவிப்பு-5000 பக்தர்களுக்கு அனுமதி.!

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்கு ஒரு நாளைக்கு 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம்  அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டும் கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர பூஜை காலங்களில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள். ஆனால், கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு பல கட்டுப்பாடுகளுடன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மண்டல மகர விளக்கு பூஜை காலங்களில் ஒரு நாளைக்கு 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும்  மேலும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உடன் வைத்திருக்க வேண்டும். நிலக்கல்லில் தரிசிக்க வரும் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும். மிக முக்கியமாக பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.

Latest Posts

#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..!
#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!