மதம் குறித்து கொரோனா வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி கொரோனா பாதித்தவர்கள் மொத்தம் 234 ஆக உயர்ந்தது. 

இந்நிலையில் டெல்லியில் மாநாடு சென்று வந்தவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்ததை அடுத்து, சாதி, மத ரீதியிலான சில வந்தந்திகள் இணையத்தில் உலாவந்தன. 

இதனை தடுக்கும் பொருட்டு, தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், ‘ சாதி, மதம் என்னவென பார்த்து  கொரோனா வருவதில்லை. கொரோனா குறித்த வதந்தி பரப்புவது நம்மை நாமே அழித்து கொள்வதற்கு சமம். சாதி, மதம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.’ என தெரிவித்தார்.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.