ஊரக உள்ளாட்சித் தேர்தல் : ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள்

  • தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
  • நேற்று ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.இதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.நேற்று  ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 3,217 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது .கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – 2,834, கிராம ஊராட்சி தலைவர் – 333, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் – 47 ,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – 3  வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது.நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல்  டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  டிசம்பர் 17 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும்.அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.