இனி ராணுவ பயிற்சி அளிக்க முடிவு !ஆர்.எஸ்.எஸ்.பள்ளியில் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது

ஆர்.எஸ்.எஸ் ( (Rashtriya Swayamsevak Sangh) தமிழில் தேசிய தொண்டர் அணி என அழைக்கப்படுகின்றது.ஆர்

By venu | Published: Aug 03, 2019 01:56 PM

ஆர்.எஸ்.எஸ் ( (Rashtriya Swayamsevak Sangh) தமிழில் தேசிய தொண்டர் அணி என அழைக்கப்படுகின்றது.ஆர் எஸ் எஸ் அமைப்பு வலதுசாரி இந்து அமைப்பு ஆகும். அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களுள் ஒருவரான ராஜு பையா நினைவாக பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்குகிறது.இந்த பள்ளியில் தான் ராணுவ பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.மேலும் இந்த பணிகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள கல்வி பிரிவான வித்யா பாரதி இதற்கான பணிகளை கவனிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்திர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள ஷிகார்பூரில் இந்த பள்ளி தொடங்கப்படவுள்ளது.இந்த பள்ளிக்கு ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர் என்று பெயர் வைக்கப்படவுள்ளது. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புகள் வரையுமான மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது .2020-ஆம்  ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இதில் சிபிஎஸ்இ பாடத்திட்ட முறை கடைபிடிக்கப்படுகிறது . மாணவர்களுக்கு ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc