600 கோடி ரூபாயில் சந்திரயான் 3 திட்டம் ,மத்திய அரசு அனுமதி – இஸ்ரோ தலைவர் தகவல்

600 கோடி ரூபாயில் சந்திரயான் 3 திட்டம் ,மத்திய அரசு அனுமதி – இஸ்ரோ தலைவர் தகவல்

  • கடந்த ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது.
  • சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

கடந்த  ஆண்டு ஜூலை 22-ம் தேதி  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் பயணம் செய்தது.பின்னர் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2- ஆம் தேதி பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது.

செப்டம்பர் 7- ஆம் தேதி நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டர் அதிகாலையில் நிலவில்  தரையிறக்க திட்டமிடப்பட்டது. எரிபொருள் உள்பட 1471 கிலோ எடையுள்ள விக்ரம் லேண்டருக்குள் பிரக்யான் ரோவர் இருந்தது. இந்திய நேரப்படி அதிகாலை 1.40 மணியளவில்   நிலவில் விக்ரம் லேண்டர் படிப்படியாக தரையிறங்க கட்டளை கொடுக்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக நிலவிலிருந்து 2.1 கி.மீ தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர்  விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர்.

இதையடுத்து லேண்டரை  கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோவிற்கு நாசா உதவியது.  விக்ரம் லெண்டரின் பகங்கள் கண்டுபிடித்து நாசா புகைப்படங்களை வெளியிட்டது. நாசா மதுரை சார்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் உள்ள கணினி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை  பணியாற்றிவந்த நிலையில் அவரது உதவியுடன் கண்டுபிடித்தது.

இந்நிலையில் இன்று இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகளை விரைவில்  தொடங்கியுள்ளோம். சந்திரயான்-3 திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.600 கோடி ரூபாயில் சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்படும் என்று  தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube