ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் – மு.க ஸ்டாலின்

இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 3 பேரின் தற்போதைய நிலை என்ன? என்றும் கொரோனாவிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.60 கோடி நிதி போதாது, ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என தெரிவித்தார். ஆனால் வீடு திரும்பிய நபரை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளோம் என குறிப்பிட்டார்.

மேலும் இதுவரை அரசு மருத்துவமனைக்கு வராதவர்கள் கூட தற்போது வருகிறார்கள் என்றும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுக்கு அதிகமான தட்டுப்பாடு இருப்பது உண்மை  என அமைச்சர் தெரிவித்தார். பின்னர் விதிமுறைகளை தளர்த்தி டெண்டர் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் வாங்க அனுமதி என அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்