ரூ 31.15 கோடி செலவில் மீனவ இளைஞர்களுக்கு  நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்-முதலமைச்சர் பழனிச்சாமி  அறிவிப்பு

Rs 31.15 crore to set up mobile fish stalls for fishermen

பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி  அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ரூ 31.15 கோடி செலவில் மீனவ இளைஞர்களுக்கு  நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும் . முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகராட்சி அதிகாரிகள் குழு, கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவார்கள்.பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு எட்டப்படும். இந்த சிறப்பு சிறப்பு குறை தீர்வு திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Chief Minister Palanisamy made the announcement at the meeting. Under the Chief Minister's Special Redressal Scheme, a group of Rural and Municipal Authorities will go directly to the villages and receive requests from the people. He said that this special special remediation scheme would be implemented in August and September.