தென்னக ரயில்வேயில் ஒரு எலியை பிடிக்க ரூ.22,000 செலவு..!

தென்னக ரயில்வே மண்டலங்களில் இருந்து தினமும் பல மாநிலங்களுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ரயில்வே துறையை தனியார் மையமாக்க இருப்பதால் இதனால் பல ஊழியர்களின் வேலை இழக்க நேரிடலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ரயில்வே தற்போது புதிய சிக்கலில் தவித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி தகவல் உரிமைச் சட்டத்தை கீழ் எழுப்பட்ட கேள்விகளுக்கு தென்னக ரயில்வே ஒரு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. அந்த அறிக்கையில் , சென்னை ரயில்வே மண்டலம் சில வருடங்களாக எலி  தொல்லையால் அவதிப்பட்டு வருகிறது. அவை பல  சேதங்களை செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் எலிகளை ஒழிக்க அதிகாரிகள் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். 2016 முதல் 2019 வரை எலிகளை ஒழிக்க மட்டுமே 5.89 கோடி செலவு செய்தோம் என கூறியுள்ளது. கடந்த ஆண்டு குறைந்தபட்சமாக 2,636 எலிகளை  பிடித்ததாக கூறியுள்ளனர்.
செங்கல்பட்டு , தாம்பரம் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய சந்திப்புகளில் மட்டுமே 1715 எலிகள் பிடிக்கப்பட்டதாகவும் , ரயில்வே பயிற்சி மையங்கள் இருந்து 900 எலிகள் பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.அதில் ஒரு எலியைப் பிடிக்க மட்டுமே 22,334 ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

author avatar
murugan