சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை – மத்திய பிரதேச முதல்வர்

சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை – மத்திய பிரதேச முதல்வர்

சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரூ.200 கோடி கடன் தொகையை வழங்கியுள்ளார்.

மத்திய பிரதேசம் போபாலில் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்தும் மற்றும் கடன் வழங்கல் திட்டத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அம்மாநிலத்தில் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1.30 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.200 கோடி கடன் வழங்கப்பட்டது.

இதனிடையே, உஜ்ஜைனிலுள்ள இந்தோக் கிராமத்தில் நீர்வழங்கலை மேம்படுத்துவதற்கான ரூ.79.03 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தோக் தடுப்புத் திட்டத்தையும் சவுகான் திறந்து வைத்தார். பின்னர் இவ்விழாவில் பேசிய முதல்வர், நான் இந்த மாநில மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளேன். எனது அரசாங்கம் மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணிப்பதாகும். இந்த திட்டம் இப்போது, பண்ணைகளின் பயனுள்ள நீர்ப்பாசனத்திற்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube