வங்கிகளில் வசூலித்த அபார தொகை ரூ.1996 கோடி..! மத்திய அரசு தகவல்..!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2012-ம் ஆண்டு வரை குறைந்தபட்சம் இருப்புத் தொகை வைத்திருக்காத

By balakaliyamoorthy | Published: Nov 26, 2019 05:02 PM

பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2012-ம் ஆண்டு வரை குறைந்தபட்சம் இருப்புத் தொகை வைத்திருக்காத வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றி வந்தது. பின்னர் நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை மீண்டும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கியது. இதில் அபாரத் தொகை அதிகமா இருப்பதாக புகார்கள் வருவதை தொடர்ந்து அதை குறைத்து, 2017 அக்டோபர் 1-ம் தேதி முதல் மறுபடியும் வசூலித்து வருகிறது. இதில் கடந்த ஆண்டில் ரூ.790.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன் பின்னர் 2016-17-ம் ஆண்டில் அதிக அளவாக ரூ.3,368.42 கோடியை வங்கிகள் வசூலித்தன. இதன் தொடர்ச்சியாக 2018-19-ம் ஆண்டில், அதாவது கடந்த மார்ச் மாதத்தில் இதுவரை 18 பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.1996.46 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் சிங் தாகூர் இந்த தகவலை தெரிவித்தார். இந்த அபராதம் நடைமுறையானது, ஜந்தன் வங்கி கணக்குகள் உள்ளிட்ட அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.
Step2: Place in ads Display sections

unicc