கஜா புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி ஒதுக்கீடு ...!

Central government allocates Rs 1146 crore for Gaza Storm

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழு டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழுவுடன் ஆலோசனை நடத்தியது. Image result for கஜா இந்நிலையில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1,146.12 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.இதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்நிலைக்கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது ஏற்கனவே 357 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு நிவாரண நிதியாக வழங்கியது.

The central government has allocated Rs 1146 crore for Tamil Nadu affected by the Gaja Storm. Chief Minister Palanisamy today met Prime Minister Narendra Modi and urged him to provide Rs 15,000 crore as relief for the Gaza Storm. The Central Committee led by Daniel Richard has completed a month's inspection of the areas affected by the Gaza Storm, but the report has not yet been filed. In this context, a team led by Tamil Nadu Chief Secretary Girija Vaidyanathan held a meeting with the Parliamentary Standing Committee in Delhi demanding relief from the Gaza Storm. The Center has allocated Rs 1,146.12 crore to the Tamil Nadu-hit Tamil Nadu state government.