இந்தி பேசாத மாநிலங்களுக்கு நேரு அளித்த உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும்-கே.எஸ்.அழகிரி

Nehru's promise to non-Hindi states must be saved - KSAlagiri

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இந்த புதிய கல்வி வரைவு கொள்கை 484 பக்கங்கள் கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்தி பேசாத மாநிலங்களுக்கு நேரு அளித்த உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும். இந்தி திணிப்பை நீண்ட காலமாக எதிர்த்து போராடி தடுத்த வரலாறு தமிழகத்திற்கு உண்டு. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படும் முடிவுகளை தமிழக அரசு துணிவுடன் எதிர்க்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

The Union Ministry of Human Resource Development has released the new Education Draft Policy. In this context, the new Education Policy Drafting Policy was recommended to train Hindi in non-Hindi state schools. Commenting on this, Tamil Nadu Congress Committee Chairman KS Alagiri said, "Nehru's promise to non-Hindi states should be protected. Tamil Nadu has a long history of fighting the Hindi dump. Tamil Nadu Congress Committee Chairman KS Alagiri said the Tamil Nadu government should boldly oppose the decisions taken without consulting the state governments.