ஜி-20 மாநாட்டிற்கு ரூ.100 கோடி நிதி ஒதிக்கீடு.!

ஜி-20 மாநாட்டிற்கு ரூ.100 கோடி நிதி ஒதிக்கீடு.!

  • 2020–21-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்பொழுது அவரது உரையில், ஜி-20 மாநாட்டிற்கு ரூ.100 கோடி ஒதிக்கீடு செய்தார்.

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள். இதன் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். அச்சடிக்கப்பட்ட பட்ஜெட் உரை பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்து சேர்ந்தது.

மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் 2020–21-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்பொழுது அவரது உரையில்,  2022-ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்படும் ஜி20 மாநாட்டிற்கு ரூ.100 கோடி ஒதிக்கீடு செய்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube