சொந்த மண்ணில் தோற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

சொந்த மண்ணில் தோற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளை பெற்றுள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்று வரும் 20-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதினர்.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணிகேப்டன் ஸ்ரேயாஸ்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பத்திலே விக்கெட்டை பறிகொடுத்தது. விராட் மற்றும் மொயீன் அலி மட்டும் ஓரளவு தாக்கு பிடித்தனர்.

இறுதியாக  20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கேட்டை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக விராட் 41,மொயீன் அலி 37 ரன்கள் அடித்தனர்.டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சில் ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது.தொடக்க வீரர்களாக ப்ரீத்வி ஷா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஷிகார் தவான் ரன்கள் எடுக்காமல் அவுட் ஆனார். அதன் பின் ஷ்ரியாஸ் ஐயர் களமிறக்கினர்.டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷ்ரியாஸ் 67 ரன்கள் எடுத்தார்.இறுதியாக டெல்லி  18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு152 ரன்கள் எடுத்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சில் நவடிப் சைனி 2 விக்கெட்டும் , டிம் சௌதி , பவன் நேகி ,  முகமது சிராஜ்  , மோயீன் அலி தலா1விக்கெட்டும் எடுத்தனர்.

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளை பெற்றுள்ளது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *