கால் பந்தில் கலக்கி விட்டு சினிமாவில் களமிறங்கும் ரொனால்டோ.!

Ronaldo in the cinema with a foot ball

  • சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரொனால்டோ கலந்து கொண்டார்.
  • அப்போது பேசிய ரொனால்டோ, ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் , அதனால் ஹாலிவுட் படங்களில் நடிக்க திட்டம் உள்ளதாக கூறினார். 
போர்ச்சுகல் நாட்டின் 34 வயது ஆன கால்பந்து வீரரான ரொனால்டோ உலகின் மிக சிறந்த வீரராக வலம் வருகிறார்.இவர் ஒவ்வொரு போட்டிலும் கலந்து கொள்ளும் போது புதிய சாதனையை படைப்பார் அல்லது மற்றவர்களின் சாதனையை முறியடிப்பார். இதனால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக ரொனால்டோ விளங்குகிறார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரொனால்டோ கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தனது எதிர்காலம் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த ரொனால்டோ ,களத்தில் தனது உடல் எப்போது ஒத்துழைக்கவில்லையோ அப்போது கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக கூறினார். மேலும் தான் ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் , அதனால் ஹாலிவுட் படங்களில் நடிக்க திட்டம் உள்ளதாக கூறினார். ஓய்வுக்கு பின்னர் தனது படிப்பையும் தொடரவுள்ளதாகவும் ரொனால்டோ தெரிவித்தார்.