தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய முதல் போட்டியிலே சதம் ! ஹிட் மேன் அபாரம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் ரோகித் சர்மா. இந்தியா

By venu | Published: Oct 02, 2019 01:47 PM

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் ரோகித் சர்மா. இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.இதில் முதல் போட்டி  விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்  கோலி  பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினார்கள். இந்திய அணி 56 ஓவர்களில்  182 ரன்கள் அடித்துள்ளது.ரோகித் 100* ,அகர்வால் 79 * ரன்களுடன் களத்தில் உள்ளனர்.இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார்.154 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் சதம் அடித்துள்ளார்.தொடக்க வீரராக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரோகித்துக்கு இது முதல் சதம் ஆகும்.
Step2: Place in ads Display sections

unicc