தொடக்க வீரராக சாதனை ! இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து ஹிட் -மேன் சர்மா சாதனை

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். இந்தியா

By venu | Published: Oct 05, 2019 03:32 PM

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா  அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது  இன்னிங்சை விளையாடி வருகிறது.இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார்.இவர் ஏற்கனவே முதல் இன்னிங்சில் 176 ரன்கள் அடித்தார் .இதனால் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா .தற்போது வரை இந்திய அணி 53 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ரோகித் 100 * ,ஜடேஜா 7* ரன்களுடன் உள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc