உலகக்கோப்பையில் உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா!

நேற்றைய கடைசி லீக் போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும்  லீட்ஸில்  உள்ள ஹெடிங்லி மைதானத்தில் மோதியது.போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி  7 விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது.

பிறகு இறங்கிய இந்திய அணி 43.3 ஓவர் முடிவில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நேற்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான  ரோஹித் சர்மா களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 பந்தில் 103 ரன்கள் குவித்தார்.இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா  5 சதங்கள் விளாசி உள்ளார்.

இந்நிலையில் உலகக்கோப்பையில் அதிகபட்சமாக ஒரு தொடரில்  4 சதங்கள் சங்கரகரா விளாசி இருந்தார்.அதுவே உலகக்கோப்பையில்  ஒரு தொடரில் அடித்த அதிகபட்சமாக சதமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ரோஹித் சர்மா முறியடித்து முதலிடத்தில் உள்ளார்.ரோஹித் சர்மா உலகக்கோப்பையில் இதுவரை 6 சதங்கள் அடித்து உள்ளார்.

author avatar
murugan