கொரோனா தடுப்பு -ரூ.80 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்த ரோகித் சர்மா

கொரோனா தடுப்பிற்கு ரூ.80 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார் ரோகித்

By venu | Published: Mar 31, 2020 11:01 AM

கொரோனா தடுப்பிற்கு ரூ.80 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.பல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

வேண்டுகோளை ஏற்று பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ரூ.80 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். அதாவது பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.45 லட்சமும்,மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும்,சோமட்டோ பீடிங் இந்தியா அமைப்பிற்கு ரூ.5 லட்சமும், Welfare Of Stray Dogs அமைப்பிற்கு ரூ.5 லட்சம் நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc