1 ரன்னில் ரோஹித் ,கே.எல் ராகுல் ,கோலி வெளியேறி இந்திய அணி திணறல் !

நேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி

By murugan | Published: Jul 10, 2019 04:10 PM

நேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி நேற்று 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் இருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று போட்டி தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து  239 ரன்கள் எடுத்தது. 240 ரன்களுடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  ரோஹித் ,கே.எல் ராகுல் இருவரும் களமிங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ரோஹித் 4 பந்தை சந்தித்து 1 ரன்னில் வெளியேறினார். பின்னர் கேப்டன் கோலி களமிறங்க அவரும் 6 பந்துகளை சந்தித்து 1 ரன்னில் வெளியேறினர். அடுத்ததாக கே.எல் ராகுலும் 1 ரன்னுடன் வெளியேற 3.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 5 ரன்கள் எடுத்து இந்திய அணி திணறி வருகிறது. இந்திய அணியின் இந்த சொதப்பலான ஆட்டத்தால் ரசிகர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc