டீசல் விலையில் மாற்றம்!இன்றைய நிலவரம் இதோ!

டீசல் விலையில் மாற்றம்!இன்றைய நிலவரம் இதோ!

சென்னையில் இன்று ( 20.09.2020)  பெட்ரோல் லிட்டர் ரூ. 84.21க்கும், டீசல் லிட்டர் ரூ.76.99 க்கும் விற்பனை ஆகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக  குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.21 ரூபாய், டீசல் லிட்டர் 77.21 ரூபாய்க்கும் விற்பனையான இந்நிலையில், இன்று நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.84.21 க்கும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.76.99க்கும்  விலை நிர்ணயம் செய்யப்பட்டு  காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது.

 

author avatar
kavitha
Join our channel google news Youtube