இயக்குனர் சங்கத் தேர்தல் - தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே. செல்வமணி வெற்றி!

இன்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு

By Fahad | Published: Mar 28 2020 11:10 AM

இன்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லாமலே இயக்குனர் பாரதிராஜா ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், சில நாட்களில் தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்தார். முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். பொது செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயக்குமார்  மற்றும் பொருளாளர் பதவிக்கு இயக்குனர் பேரரசு ஆகியோர் போட்டியின்றி தேர்வானார்கள். இந்நிலையில், காலியாக இருந்த தலைவர் பதவிக்கு இன்றைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் ஆர்.கே. செல்வமணி உட்பட பலர் போட்டியிட்டனர். இறுதியாக தபால் வாக்குகள் 6 சேர்த்து மொத்தம் 1.503 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில்  1386 வாக்குகளை பெற்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

More News From tamil directors association