இணையத்தில் ட்ரெண்டாகும் #RIPtiktok ஹேஸ்டேக்!

இணையத்தில் ட்ரெண்டாகும் #RIPtiktok ஹேஸ்டேக். கடந்த, 15ம் தேதி, காஷ்மீர் மாநிலத்தின்

By leena | Published: Jul 01, 2020 09:00 AM

இணையத்தில் ட்ரெண்டாகும் #RIPtiktok ஹேஸ்டேக். கடந்த, 15ம் தேதி, காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நிலவி வரும் மோதலை அடுத்து இருநாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து, மத்திய அரசு, சீன செயலிகளுக்கு தடை விதித்ததையடுத்து, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் ஆப் அதிரடியாக  நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டிக் டாக் செயலியில் இதுவரை தங்களை சினிமா நட்சத்திரங்கள் போல நினைத்து கொண்டு வளம் வந்தவர்களுக்கெல்லாம் இது ஏமாற்றமாகவும், இழப்பாகவும் அமைந்துள்ளது. இதனையடுத்து ட்வீட்டரில், #RIPtiktok என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc