பிரபல குணசித்ர நடிகரும் – இயக்குனருமான ராஜசேகர் திடீர் மரணம்!

பிரபல குணசித்ர நடிகரும் – இயக்குனருமான ராஜசேகர் திடீர் மரணம்!

பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான நிழல்கள் படம் மூலம் தமிழசினிமாவில் நல்ல நடிகராக அறியப்பட்டவர் நடிகர் இயக்குனர் ராஜசேகர். பின்னர் இவர் நண்பர் ராபர்ட் உடன் இணைந்து பாலைவன சோலை, மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப்பூவே மெல்ல பேசு ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார்.

இவர் திரைத்துறையில் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்ததை தொடர்ந்து சின்னத்திரையிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி முக்கிய நடிகரானார். முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வந்து புகழ் பெற்றார்.

இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவிற்கு சின்னத்திரை, மற்றும் பெரிய திரை கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube