சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திடீர் மறைவு! மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி!

  • சென்னை, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிமன்ற முன்னாள் நீதிபதி ச.மோகன் உடல்

By Fahad | Published: Apr 06 2020 10:09 PM

  • சென்னை, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிமன்ற முன்னாள் நீதிபதி ச.மோகன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். 
  • இவரது மறைவிற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நீதியரசர் மோகன், 1954ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். இவர் சென்னை உயர்நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் ஆகிய உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தில் பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது உடல் அஞ்சலிக்காக, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது இறுதி சடங்குகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அவரது மறைவிற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.