காதலிக்கும் நபர்கள் இன்றைய நாளில் ஆற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

காதலிக்கும் நண்பர்கள், உலக காதலர் தினமான இந்த நன்னாளில் தங்களது

By soundarya | Published: Feb 14, 2019 11:11 AM

காதலிக்கும் நண்பர்கள், உலக காதலர் தினமான இந்த நன்னாளில் தங்களது காதலை சிறப்பிக்கும் விதமாக செயலாற்ற வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் அன்பு - காதல் எனும் விஷயத்தை போற்றி கொண்டாடும் புனித தினம் இன்று. காதலிக்கும் இளசுகள் மட்டுமின்றி, இரு உள்ளங்களுக்கு இடையே காதல் உணர்வு கொண்டிருக்கும் தம்பதியர், வயது முதிர்ந்த தம்பதியர் என அனைவருமே தங்கள் அன்பை சிறப்பிக்க வேண்டிய முக்கிய தினம் இது.

காதலின் நிலை - சரியான பரிசு

இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் என்ன செய்வது, தங்கள் துணைக்கு என்ன பரிசு வழங்குவது என குழம்பி போயிருப்பீர்; சிலரோ சினிமாவில் வருவது போல் ரோஜா - தாஜ்மஹால் என்ற புராண பரிசுகளை வழங்க திட்டமிட்டு இருப்பர். இந்த பதிப்பின் வாயிலாக உங்கள் காதல் உறவு எந்த நிலையில் உள்ளது என்பதை ஆராய்ந்து அறிந்து, அதற்கேற்ற சரியான பரிசு எதுவென அறிந்து அதனை இன்றைய தின காதல் சின்னமாக்குங்கள்! வாருங்கள் பதிப்பிற்குள் செல்லலாம்.

காதல் சொல்ல வந்தேன்!

காதலிக்கும் நபரிடம் காதலை சொல்லாமல் மறைத்து வைத்து, ஒருதலை காதல் கொண்டிருக்கும் நண்பர்களே! உலக காதலர் தினமான இப்பொன்னாளில் உங்கள் காதலை அழகான கவிதைகளாக, கடிதங்களாக எழுதி, உமது காதலின் ஆழத்தை வெளிப்படுத்துங்கள். உணர்ச்சிப்பூர்வமாக - உண்மையாக காதலை வெளிப்படுத்தினால், யாராக இருந்தாலும் நிச்சயம் அதை ஏற்றுக்கொள்வர்.

காதலின் துவக்கம்!

இப்பொழுது தான் காதலிக்க தொடங்கி இருக்கும் நபர்கள், உங்கள் காதலை துணை என்றென்றும் எண்ணிப்பார்த்து மகிழும் வகையில் ஒரு பரிசினை அளியுங்கள். இந்த பரிசு அவர்களின் நீண்ட நாள் கனவை நினைவேற்றுவதாக இருந்தால் மிகவும் நல்லது; இப்படி ஒரு பரிசை தந்தால், அது அவர்களின் இதயத்தில் ஆழமான அன்பை ஏற்படுத்த உதவும்.

6 மாத - 1 வருட காதல்!

காதல் செய்ய தொடங்கி 6 மாதம் அல்லது 1 வருடம் முடிந்த நிலையில் இருக்கும் நபர்கள், உங்களை துணை ஒவ்வொரு நிமிடமும் நினைத்து பார்க்க உதவும் வண்ணம் அழகான கைக்கடிகாரம், நகை, ஆடை, பூச்செடி போன்றவற்றை பரிசளிக்கலாம்.

மணமான பின்னரான காதலர் தினம்!

திருமணத்திற்கு பிறகான முதல் காதலர் தினத்தினை அதிரடியாக கொண்டாட வேண்டியது அவசியம்; இல்லையெனில் தன் மீதான காதல் குறைந்து விட்டது என உங்கள் துணை எண்ணலாம். உறவின் இந்த நிலையில், உங்கள் காதல் துணையை தேனிலவு அழைத்துச் சென்று அன்பு மழையில் நனையச் செய்யுங்கள்; தேனிலவின் ஒவ்வொரு நிமிடத்திலும் அவர்களை ஆச்சரியப்பட செய்து, துணையின் மனதில் நீங்கா இடம் பெற்றிடுங்கள்.

பல ஆண்டுகளுக்கு பின்..

திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும், ஒவ்வொரு ஆண்டின் காதலர் தினத்தையும் சிறிய அளவிலாது கொண்டாடி மகிழ வேண்டியது மிகவும் அவசியம். இந்த நாளில் பிள்ளை குட்டிகளை உறவுகளின் கண்காணிப்பில் விட்டு விட்டு, வேலைகளை மறந்து, உங்களுக்கிடையிலான காதலை கொண்டாட வேண்டியது மிகவும் முக்கியம். காதலர் தினத்தன்று சுற்றுலா செல்வது, வெளியில் உணவருந்த செல்வது போன்ற விஷயங்களை செய்யலாம். உங்களுக்குள் இருக்கும் காதல் வற்றாமல் இருந்தால், ஒவ்வொரு வருடமும் தேனிலவு சென்று வரலாம். காதலர் தினத்தையும் அன்பைக் கொண்டாடும் பண்டிகை தினமாக எண்ணி அவசியம் கொண்டாடுங்கள்!
Step2: Place in ads Display sections

unicc