டெஸ்ட் போட்டியில் ரிக்கிபாண்டிங் , டான் பிராட்மேன் பிறகு சாதனைப் படைத்த மார்னஸ்.!

டெஸ்ட் போட்டியில் ரிக்கிபாண்டிங் , டான் பிராட்மேன் பிறகு சாதனைப் படைத்த மார்னஸ்.!

  • மார்னஸ் கடந்த 7 இன்னிங்சில் 4 சதம் அடித்து அசத்தி உள்ளார்.
  • இதற்கு முன் ரிக்கிபாண்டிங் , டான் பிராட்மேன் ஆகியோர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து சாதனை படைத்தது உள்ளனர்.

நியூசிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.  இதைத்தொடர்ந்து தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ் இருவரும் இறங்கினர் ஆனால் ஆட்டம் தொடக்கத்திலே ஜோ பர்ன்ஸ் 18 ரன்னில் வெளியேறினார்.பிறகு நிதானமாக விளையாடிய டேவிட் வார்னர் அரைசதம் அடிக்காமல் 45 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இதையெடுத்து ஸ்மித் ,மார்னஸ் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஸ்மித் அரைசதம் அடித்து 63 ரன்னில் வெளியேறினார்.  சிறப்பாக விளையாடி மார்னஸ் சதம் விளாசினார். இதனால் 25 வயதான மார்னஸ் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் ,7 அரைசதம் அடித்து உள்ளார்.

கடந்த நான்கு போட்டிகளில் மூன்று சதங்கள் எடுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்த மார்னஸ்  தற்போது மீண்டும் சதம் அடித்து உள்ளார்.இதன் மூலம் கடந்த 7 இன்னிங்சில் 4 சதம் அடித்து அசத்தி உள்ளார்.இதற்கு முன் ரிக்கிபாண்டிங் , டான் பிராட்மேன் ஆகியோர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து சாதனை படைத்தது உள்ளனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube