இடஒதுக்கீடு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.!

அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீட்டை மத்திய

By balakaliyamoorthy | Published: Jun 03, 2020 03:23 PM

அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தப்படவில்லை

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 % இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% ஒதுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அகில இந்திய தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தப்படவில்லை என்று மனுவில் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இளநிலை மருத்துவப்படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவ படிப்பு, மருத்துவ டிப்ளமோ படிப்பு உள்ளிட்டவற்றில் ஒதுக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதனை கல்வியாண்டில் ஒதுக்கி உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc