குடியரசு தின அணிவகுப்பில் தாரை தப்பாட்டத்துடன் சென்ற அய்யனார் சிலை வாகனம்.!

குடியரசு தின அணிவகுப்பில் தாரை தப்பாட்டத்துடன் சென்ற அய்யனார் சிலை வாகனம்.!

  •  ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் பல்வேறு மாநிலங்களின் தங்கள் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது.
  • அதில் தமிழகம் சார்பில் தமிழர்களின் காவல் தெய்வமாகக் கருதப்படும் அய்யனார் சிலை , ஒயிலாட்டம் , தப்பாட்டம் போன்றவை அணிவகுப்பு வாகனத்தில் இடம்பெற்றது. 

இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் தேசியக் கொடியேற்றி ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதைப்போல  டெல்லி ராஜ்பாத்தில்  குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். இந்த விழாவில்  குடியரசு துணைத்தலைவர் வெங்கையா  நாயுடு ,பிரதமர் மோடி , பிரேசில் அதிபர் மெசியாஸ் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் தங்கள் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு வாகனங்கள் இடம்பெற்றன.

அதில் தமிழகம் சார்பில் தமிழர்களின் காவல் தெய்வமாகக் கருதப்படும் அய்யனார் சிலை , ஒயிலாட்டம் , தப்பாட்டம் போன்றவை அணிவகுப்பு வாகனத்தில் இடம்பெற்றது. இந்த சிலை 13 அடி உயரம் கொண்டது. அய்யனார் சிலைக்கு முன்னால் குதிரையும் , காவலாளிகளும இருப்பது போல இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையை சென்னை மாங்காடு அருகே கோவூர் ஒரு கிராமத்தை சேர்ந்த டில்லி பாபு என்பவர் வடிவமைத்தார்.

இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

author avatar
murugan
Join our channel google news Youtube