புதிய கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை: இன்று ஸ்டாலினிடம் ஒப்படைக்கிறது குழு

Statement on New Education Policy: Committee to hand over to Stalin today

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இதில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்தது. இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது சில வட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால்  இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கம் செய்தது மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் . திமுக சார்பில்  புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கையை ஆராய்ந்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது .அந்த குழுவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, டாக்டர் ரவீந்திரநாத் உட்பட 8 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த குழு  இன்று  திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கையை  அளிக்க உள்ளனர். பின்  இந்த அறிக்கை மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Union Ministry of Human Resources Development has released the new Education Draft Policy. Not only in Tamil Nadu, but also in some northern states, there has been fierce opposition to the teaching of Hindi in non-Hindi state schools. The Union Human Resource Development Ministry has dismissed the suggestion that Hindi should be taught in non-Hindi states. The DMK's study committee was constituted on behalf of the DMK to examine the new draft National Education Policy. In this backdrop, the group today called on DMK leader MK Mukherjee. They are to report to Stalin. The report will then be forwarded to the Human Resources Department.