தங்க கடத்தல் தொடர்பாக கேரள முதல்வரின் முதன்மை செயலர் நீக்கம்

தங்கம் கடத்தல் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு பார்சல் வந்துள்ளது.எனவே தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு செய்தி  வந்தது.இதனையடுத்து சுங்கத்துறை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று திருவனந்தபுரத்தில் உள்ள  ஐக்கிய அரபு அமீரகதூதரகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள  பார்சல்களை ஆய்வு செய்த போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருந்துள்ளது.

இந்த பார்சலை எடுக்க வந்த சரித் என்பவரும் கைது செய்யப்பட்டார்.இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும்  ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.இதனால் மக்கள் தொடர்பு அலுவலராக தூதரகத்தில்  பணியாற்றிய சரித் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வப்னா என்பவரும் தூதரகத்தில் நிர்வாகச் செயலாளராக பணிபுரிந்து பின்னர் பதவியை விட்டு விலகியதும் விசாரணையில் தெரியவந்தது.  ஸ்வப்னா கேரள அரசின் முதன்மை செயலர் மற்றும்  தகவல் தொடர்பு துறைக்கும் செயலர் சிவசங்கருக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டது. எனவே இவரிடமும் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.