கொரோனா தடுப்பு: ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிதியுதவி.!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில்

By balakaliyamoorthy | Published: Mar 30, 2020 08:29 PM

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 29 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1071 -ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா வைரசால் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் நிதி அளிக்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஏராளமான கிரிக்கெட் வீரகள், திரைப்பட பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் என பலர் அவர்களால் முடிந்த நன்கொடையை வழங்கி வருகின்றனர். 

அந்த வகையில் கொரோனா தடுப்பு பணிக்காக டாடா நிறுவனம் ரூ.1500 கோடி, அதானி குழுமம் சார்பில் ரூ.100 கோடி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.51 கோடி நிதியை பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது  ரூ.500 கோடி நிதி வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பிரதமரின் கொரோனா தடுப்பு பணிக்கான நிதிக்கு ரூ.500 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc