10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது  அரசுத் தேர்வு இயக்ககம் .அதில், 12ம் வகுப்பு தேர்வு  மார்ச் 2-ஆம் தேதி தேர்வு தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறும்.மேலும்  12ம் வகுப்பு  தேர்வு முடிவுகள் அடுத்தாண்டு ஏப்ரல் 24 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11-ஆம் வகுப்புக்கு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி முடிகிறது. மே 14-ஆம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் .அதே போல் 10-ஆம் வகுப்பு தேர்வு  மார்ச் 17-ஆம் தேதி  தொடங்கி ஏப்ரல் 9-ஆம் தேதி முடிவடையும். மே 4 ஆம் தேதி தேர்வு  முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.