தளர்வுகளை படிப்படியாகத்தான் அமல்படுத்த வேண்டும் – உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

முழுமையான தளர்வுகளை அமல்படுத்த வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனால், உலக நாடுகள் முழுவதும் இந்த நோயை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது இந்த வைரஸ் தாக்கத்தால், உலகம் முழுவதும் இதுவரை, 3,401,110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 239,604 பேர் உயிரிழந்துள்ளனர்.பாதிப்பிற்கு ஏற்றவாறு ஒரு சில நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் கூட்ட நடைபெற்றது.இந்த கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி கால நிபுணர் டாக்டர் மைக் ரையான் பேசுகையில் ,கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் இருந்தாலும் தனி நபர் இடைவெளி நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.குறிப்பாக தளர்வுகளை படிப்படியாக மட்டுமே அமல்படுத்த வேண்டும்.மீண்டும் கொரோனா பரவ வாய்ப்பு இருந்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.