சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றால் தளர்வு ரத்து.!

சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றால் தளர்வு ரத்து.!

சமூக இடைவெளி மற்றும் பிற விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அந்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்படும். மேலும் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் நேற்று வரை 42,836 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவால் இதுவரை 1389 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை  11,762 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீடித்து சில தளர்வுகளை அறிவித்தது. இதை தொடர்ந்து டெல்லியில் முன்பு இருந்த ஊரடங்கை விட நேற்று சில தளர்வுகளுடன் வேலைகள் மேற்கொள்ளவும், கடைகள் திறக்கவும் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் படி நேற்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. மதுபானக் கடைகள் திறந்ததால் மதுபான பிரியர்கள் சமூக இடைவெளி விதிமுறைகளை மீறினர்.

இந்நிலையில்,  அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து கூறுகையில், சமூக இடைவெளி மற்றும் பிற விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அந்த பகுதிகளுக்கு சீல் வைக்கப்படும். மேலும் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என கூறினார். நாம் அனைவரும் பொறுப்புள்ள குடிமக்களைப் போல நடந்து கொள்ளவும். கொரோனா வைரஸை தோற்கடிக்க  முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றவும் என்று அவர் கூறினார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube