மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு.!

மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 10 பாஜக எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒத்திவக்கப்பட்ட மத்திய பிரதேச சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் இன்று மீண்டும் கூட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே ஒரே சபை நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கையை உயரத்தூக்கி தங்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என தெரிவித்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது வீடியோ பதிவு செய்யவும், வாக்கெடுப்பில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பங்கெடுக்க விரும்பினால் கர்நாடக டி.ஜி.பி மற்றும் மத்திய பிரதேசம் டி.ஜி.பி பாதுகாப்பளிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்குள் முடிவடைய வேண்டும் என குறிப்பிட்டது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்