ஆடி கார்களின் விலையை அதிரடியாக குறைத்த நிறுவனம்..!மகிழ்ச்சியில் கார் ஓட்டிகள்

ஆடி கார்களின் விலையை அதிரடியாக குறைத்த நிறுவனம்..!மகிழ்ச்சியில் கார் ஓட்டிகள்

இந்தியாவில் ஆடி கார்களின் விலையை அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆடி இந்தியா நிறுவனம் தன்னுடைய A3Sedan கார் மாடல்களின்  விலையை  குறைத்துள்ளது.ஐந்து வருடமாக விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது தான் விலை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதன் படி ரூ. 5 லட்சம் வரை குறைத்துள்ளது.
Related image
மேலும் A3 பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ.28.99 லட்சம் X-ஷோரூம்களில்  கிடைக்கிறது தற்போதைய விற்பனை செய்யப்படும் விலையை விட இது  ரூ.4.13 லட்சம் குறைவாகும்.
அதே போல் பெட்ரோலில் இயங்க கூடிய  35 TFSI பிரீமியம் +வேரியண்ட் ஆனது  ரூ.33.12 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இப்பொழுது  ரூ.28.99 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Related image
மேலும்  35 TFSI  மாடல் ரூ.34.57 லட்சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது ஆனால் தற்பொழுது ரூ.30.99 லட்சம் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
35 TDI பிரீமியம் பிளஸ் வேரியண்ட் – டீசல் என்ஜின் கொண்ட இவை  ரூ.34.93 லட்சத்தில்  விற்கப்பட்டு வந்தது ஆனால் விலை குறைப்பிற்கு பின் ரூ.29.99 லட்சத்தில் விற்கப்படுகிறது.
Related image
அதே போல் ரூ.36.12 லட்சத்தில்  விற்கப்பட்டு வந்த 35 TDI டெக்னாலஜி வேரியண்ட் இப்பொழுது   ரூ.31.99 லட்சத்திற்கு விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha
Join our channel google news Youtube