சிகப்பு நிற உதடு வீட்டிலிருந்தே பெறுவது சுலபம்! எப்படி தெரியுமா?

பெண்கள் ஆண்கள் யார் என்றால் என்ன? இருவருக்குமே உதடு சிகப்பாக இருந்தால் வேண்டாம் என்றா இருக்கிறது. உதடு என்பது முகத்தில் அழகை கூட்ட கூடிய ஒரு அங்கமாக கருதப்படுகிறது. இது சிலருக்கு மிகவும் கருப்பாக இருப்பதால் முகம் வாடியது போல காணப்படும். இந்த உதட்டை எப்படி வீட்டில் இருந்தே சிகப்பாக மாற்றலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • சீனி
  • எலுமிச்சை பழச்சாறு

செய்முறை

முதலில் சிறிதளவு சீனி எடுத்துக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு எடுத்து லேசாக கலக்கவும். சொர சொரப்பான கரையாத சீனியை தான் நாம் உபயோகிக்க போகிறோம். லேசாக கலந்து விட்டு அதை அப்படியே எடுத்து உதட்டில் முதலில் தேய்த்து 2 நிமிடம் அப்படியே வைத்துவிட வேண்டும். அதன் பின்பு மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக, இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக நான்கு பக்கமும் நன்றாக தேய்க்க வேண்டும்.

இரு விரல்கள் வைத்து உதட்டை சுற்றி மசாஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும். 5 நிமிடம் தொடர்ந்து இதுபோன்று செய்து விட்டு, ஒரு நிமிடம் வைத்து விட்டு மீண்டும் அதை கழுவி விடலாம். இது போல இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் செய்து வந்தாலே போதும். சிகப்பழகான உதடு வீட்டிலிருந்தே நிச்சயம் நீங்கள் பெறலாம். ஒருமுறை உபயோகித்து பாருங்கள்.

author avatar
Rebekal