தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில்  கனமழை பெய்து வருகிறது.இன்று தமிழகத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாளை ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நிர்வாக அதிகாரிகள் மூலமாக அறிவிக்கப்பட்டதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

இந்த ரெட் அலர்ட் தமிழகம் முழுவதும் கிடையாது ஒரு சில மாவட்டங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. சென்னை , காஞ்சிபுரம் ,விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் தூத்துக்குடி , நெல்லை, வேலூர் ,திருவண்ணாமலை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

சூறாவளி காற்று வீசும் என்பதால் லட்சத் தீவு கடல் பகுதிக்குள் மீனவர்கள் யாரும் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகரித்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவியக்கப்பட்டு உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan