18 வயதுக்குட்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தினால் ஆயுள் தண்டனை தர பரிந்துரை - முதல்வர்

18 வயதுக்குட்பட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தினால் ஆயுள் தண்டனை தர பரிந்துரை - முதல்வர்

பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்குவதற்கு மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி, மூன்றாவது நாளான இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, 110-விதியின் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், பிரிவு 352Dல் தவறான குற்ற நோக்கத்துடன் பெண்களை பின்தொடர்ந்து, அதனை இரண்டாவது முறையும் தொடர்ந்து குற்றம் செய்தால், தற்போது வழங்கப்படும் 5 ஆண்டு சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, பிரிவு 372ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர்களை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர்களை விலைக்கு வாங்குதல் ஈடுபட்டால், தற்போது வழங்கப்படும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பதிலாக, குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்ச ஆயுள் தண்டனையும் வழங்குவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அம்மாவின் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எப்போதும் அரணாக இருந்து அவர்களை காக்கும் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

2,200 கி.மீ தூரம் சைக்கிளில் "புனித யாத்திரை" மேற்கொண்ட 68 வயது மூதாட்டி!
இன்று சர்வதேச "பனிச்சிறுத்தை" தினம்.!
விரைந்த RAW...காதமாண்டுவில் நடந்தது என்ன.?
பீகாரில் மோடி பிரச்சாரம்..விறுவிறுப்பாக நடைபெறும் ஏற்பாடுகள்..!
புதிய ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் - முதல்வர் பழனிசாமி
இன்றைய பங்கு சந்தை நிலவரம்.!
அக்-22 கருப்பு தினம்: பாக்.,எதிர்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்..!
பேஸ்பேக் & ட்விட்டர்க்கு நாடாளுமன்றக் குழு நோட்டீஸ்..!
உங்கள் நீலிக்கண்ணீரும், அரசியல் நடத்தையும் நகைப்பிற்குரியது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தடை...எதிர்த்து ராஜபச்சே மேல்முறையீடு.!