நியூசிலாந்திற்கு பின்னடைவு .! டி20 தொடர்ந்து ஒருநாள் தொடரில் விலகிய கேன் வில்லியம்சன் .!

  • நாளை இரு அணிகளுக்கும் இடையில் ஒருநாள்தொடர்  தொடங்க உள்ளது.கேன் வில்லியம்சனுக்கு காயம் குணமாகாத காரணத்தால் முதல் இரண்டு போட்டியில் விலகி உள்ளார்.
  • கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் ஏற்பட்ட காரணமாக அடுத்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் வில்லியம்சன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.அதில் முதல்கட்டமாக இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் முடிவடைந்தன.

இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற 3-வது டி20 போட்டியின் போது நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு போட்டியின் போது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.இதன் காரணமாக அடுத்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் கேன் வில்லியம்சன் விலக்கியதை தொடர்ந்து  நியூஸிலாந்து கேப்டனாக டிம் சௌத்தி செயல்பட்டார்.

இதையெடுத்து நாளை இரு அணிகளுக்கும் இடையில் ஒருநாள்தொடர் தொடங்க உள்ளது. கேன் வில்லியம்சனுக்கு காயம் குணமாகாத காரணத்தால் முதல் இரண்டு போட்டியில் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.இதனால் நியூஸிலாந்து அணிக்கு  கேப்டனாக டாம் லதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வருகின்ற பிப்ரவரி 11 -ம் தேதி நடைப்பெறவுள்ள 3-வது ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன்  கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.கேன் வில்லியம்சனுக்கு பதிலாக  மார்க் சேப்மேன் நியூஸிலாந்து ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk