ஒரே ஆண்டில் விற்பனையில் சுடுபிடித்து, முன்னணி நிறுவனமாக உருவெடுத்தது ரியல்மீ..!

ரியல்மி, இந்தியாவில் தனது வியாபாரத்தை தொடங்கி ஒரு வருடமே ஆகிய நிலையில், சுமார்

By Fahad | Published: Apr 06 2020 06:15 AM

ரியல்மி, இந்தியாவில் தனது வியாபாரத்தை தொடங்கி ஒரு வருடமே ஆகிய நிலையில், சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு விற்பனை இருமடங்கு உயரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவை சேர்ந்த ரியல்மி நிறுவனம், இந்தியாவில் மே 2018ல் தனது வியாபாரத்தை துவங்கியது. துவக்கம் முதலே விற்பனையில் சூடு பிடித்த ரியல்மி பிராண்டு, இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்தது. மேலும் இந்திய சந்தையில் இந்நிறுவனம் சியோமி மற்றும் சாம்சங் பிராண்டுகளுக்கு போட்டியாளராகவும் பார்க்கப்படுகிறது. Image result for realme logo" தற்போதைய நிலவரப்படி, ரியல்மி ஸ்மார்ட்போன், இந்திய சந்தையில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மேலும், விவோ மற்றும் ஒப்போ போன்று இல்லாமல் ரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் கணிசமான வரவேற்பினை துவக்கம் முதலே பெற்று வருகிறது. இந்தியாவில் துவங்கப்பட்ட ரியல்மி நிறுவனம், தற்சமயம் உலகம் முழுக்க சுமார் 20 நாடுகளில் வியாபாரம் செய்து வருகிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரியல்மி பிராண்டு மொத்தம் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts