தேவையான உதவிகளை செய்ய தயார் -கேரள முதல்வரிடம் பேசிய தமிழக முதல்வர்

தேவையான உதவிகளை செய்ய தயார் -கேரள முதல்வரிடம் பேசிய தமிழக முதல்வர்

கேரள நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார் என்று   தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்தது. இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி, கேரளாவின் மூணாறு பகுதியில்  தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய் மாண்புமிகு கேரளா முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவு தொடர்பாக அம்மாநில  முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தேவையான உதவிகளை செய்ய தயார் என உறுதியளித்தேன் என்று பதிவிட்டுளளார்.

Join our channel google news Youtube