பரோலில் வெளியே வந்தார் ராஜீவ்காந்தி கொலையில் சம்மந்தப்பட்ட ரவிச்சந்திரன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் ரவிச்சந்திரன்.

ராஜீவ் காந்தி கொலையில் 16வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட விருதுநகர் – அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இவர் ராஜீவ்காந்தி கொலையில் குற்றவாளிகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்டுள்ள்ளது. 26 ஆண்டுகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு  தண்டனை அனுபவித்த ரவிச்சந்திரன் இன்று முதல் 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார்.

தமது சொத்துக்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இதன் படி, ரவிச்சந்திரனுக்கு இன்றைய 5 ஆம் தேதி முதல் வரும் மார்ச் 19 ஆம் திகதி வரை பிணையில் செல்வதற்கு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.சொத்துக்களைப் பார்வையிடவும், பதிவுத்துறை அலுவலகம் செல்லவும், மீனாட்சியம்மன் கோவில் செல்லவும் ரவிச்சந்திரனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், அவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment