3 படங்கள்,ரூ120 கோடி ; பொருளாதார மந்தநிலையே இல்லை-கருத்தை திரும்பப்பெற்ற மத்திய அமைச்சர்

சர்ச்சை கருத்தை கூறிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  தனது கருத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் – ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக குறைந்தது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்தது.இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.அப்பொழுது அவர் கூறுகையில், அக்டோபர் 2-ஆம் தேதி வெளியான 3 திரைப்படங்களுக்கும் சேர்த்து அன்றைய தினம் 120 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர் .இது நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கு சான்று என்றும் தெரிவித்தார் ரவிசங்கர் பிரசாத்.இவரது இந்த கருத்துக்கு  சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் இன்று இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  வெளியிட்டுள்ள அறிக்கையில்  தனது கருத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளார்.  கடந்த 2-ஆம் தேதி சயிரா நரசிம்ம ரெட்டி,ஜோக்கர், வார்  ஆகிய 3 திரைப்படங்கள் வெளியாகியது .இந்த திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனைகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.